ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்தது..!
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க உத்தரவிடக்கோரி சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையம் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முடித்து விட்டதாக தெரிவித்தார்.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை ஆணையால் 2019 ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த வழக்கு வரும் 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை பதிவு செய்துகொண்ட தலைமை நீதிபதி அமர்வு வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.







