சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன..!
ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகங்களில் முக்கிய தலைவர்களின் பெயர்களுக்குப் பின்னால் இருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அண்மையில் தமிழக அரசினால் புதிய பாட புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன.
அந்த பாட புத்தகங்களில் வரலாறு, கவிதைகள், போராட்டங்கள் போன்றவற்றை குறிக்கும் பகுதிகளில் தலைவர்களின் பெயர்களோடு இடம் பெற்றிருந்த சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் என்ற தலைப்பில் உள்ள பகுதியில் தமிழ்த் தாத்தா உ வே சாமிநாதன் என்று மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அதற்கு பின்னால் சாதிப் பெயரை தமிழக அரசு நீக்கியுள்ளது.
தமிழில் வெளியான முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயர் மாயூரம் வேதநாயகம் என்று மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பெயர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் நூல்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டு வருவதாக பாடநூல் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






