தங்கையின் கணவரை கைது செய்யக்கோரி டிக் டாக் தர்மராஜ் போராட்டம்..!
டிக் டாக் தர்மராஜ் தனது தங்கையின் கணவரை கைது செய்யக்கோரி குடும்பத்துடன் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கல் சின்னையாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரன், திவ்யா இருவருக்கும் இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் திவ்யாவின் கணவர் ஈஸ்வரன் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு படிக்க சென்ற இடத்தில் உடன் படித்த மற்றொரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் திவ்யாவுக்கும் ராஜேஷ்வரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தனது கணவர் தன்னை கொடுமைப் படுத்தி வருவதாகவும் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்துவதாகவும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தர்மராஜ் தங்கை கணவரின் பெற்றோரையும் கைது செய்ய வலியுறுத்தி மாவட்டஎஸ்பி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






