படப்பிடிப்பின்போது கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த சேரன்..!
படப்பிடிப்பின்போது கட்டடத்தில் இருந்து தவறி விழுந்ததில் இயக்குனரும் நடிகருமான சேரன் காயமடைந்தார். நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு என்னும் படத்தில் சேரன் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வீட்டின் மாடியில் ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து தனது காட்சிகளில் நடித்து கொடுத்ததாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






