நாளை முதல் அமலுக்கு வரும் கூடுதல் தளர்வுகள்..!
கொரொனா ஊரடங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
அதன்படி உணவகங்கள் தேநீர் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்பட உள்ளது. மேலும் இப்பொழுது இரவு 7 மணி வரை அனுமதிக்கப்படும் அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் அனுமதிக்கப்படுகிறது.






