--- --:--:-- --

இந்தியாவில் தடுப்பூசி போட்டவர்கள் சுதந்திரமாக பயணிக்கலாம் ..!

1

ந்தியாவின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாவது கட்ட தரப் பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் எம் கே அரோரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

பாரத் பயோடெக் நிறுவனம் கொரொனாவுக்கு எதிராக போராடிய செயல்திறன் 77.8 சதவீதம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் அரோரா இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு தடையின்றி பயணம் செய்ய இந்த முடிவுகள் உதவும் என்று கூறினார். டெல்டா வைரசுக்கு எதிராகவும் 65 சதவீதத்திற்கும் மேல் கோவாக்சின் பயனளிப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon