முக கவசம் அணியாததால் பிரதமருக்கு 14 ஆயிரம் ரூபாய் அபராதம்..!
தாய்லாந்தில் முகக்கவசம் இல்லாமல் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமருக்கு பதினான்காயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரொனா வேகம் எடுத்து வருகிறது. அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பரவி வருகிறது.
கொரொனா பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கட்டுப்பாடுகளை தீவிரமாகி வருகிறது. நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகரில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி போடுவது குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் முகக் கவசம் அணியாமல் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து 14 ஆயிரத்து 270 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.






