இன்று முதல் வங்கியின் செயல்நேரம் குறைப்பு..!
கொரொனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் வங்கிகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும், மேலும் வங்கிகளில் ஆதார் திருத்தம் மையங்களின் பணிகளை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வங்கி செயல்பட்டு நேரம் குறைக்கப்படும். சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்கு தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.






