--- --:--:-- --

இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு..!

7

மிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதே நேரத்தில் பிற இடங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று மாலை கனமழை பெய்தது. அருமனை, களியல், நாடுகாணி போன்ற இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

 

பெரியகுளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்துள்ளது. பெரியகுளம் மற்றும் காமாட்சிபுரம், வடுகபட்டி, சோத்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான சாரல் மழை பெய்தது.

Leave a Reply

Right Menu Icon