--- --:--:-- --

100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து..!

4

பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை உள்ளிட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது. அவசர மற்றும் அவசியமான தேவைகளுக்காக வழக்கமான கால அவகாசத்தைக் குறைத்து குறுகிய கால டெண்டர்கள் வழங்கப்படும். ஆனால், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்த பிறகு குறுகிய டெண்டர்கள் மூலம் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, பல்வேறு குறுகிய கால டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மே 13 முதல் மே 22 ஆம் தேதி வரை வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

 

 

இதையும் படிங்க: 16 இடங்களில் நேற்று சதம் அடித்த வெயில்… இன்றைய வானிலை எப்படி இருக்கும்?
குறிப்பாக, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளில் போடப்பட்ட குறுகிய கால டெண்டர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon