முழு முடக்க நாளான நாளை 16 சிறப்பு ரயில்கள் ரத்து..!
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .கொரொனா பரவலை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மூலம் தமிழக அரசு அறிவித்தது.
அதனையொட்டி நாளையும் இரண்டாம் தேதியும் 16 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் இருந்து இயக்கப்படும் திருச்சி, காரைக்குடி சிறப்பு ரயில், மதுரை, விழுப்புரம் சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, புதுச்சேரி, திருச்சி கரூர் வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு நாளான நாளை ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






