நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளது..!
நடிகர் விவேக்கிற்கு இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்க்கும் தடுப்பூசி போட்டதற்கும் சம்பந்தம் இல்லை என்று மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக்கிற்கு ஆஞ்சியோகிராம் செய்து இதய குழாய் அடைப்பு நீக்கப்பட்டது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.






