--- --:--:-- --

மகளின் திருமண கடனை அடைக்க போலீஸ் உடை அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட தந்தை..!

8

ளுந்தூர்பேட்டை அருகே மகளின் திருமண கடனை அடைக்க போலீஸ் உடை அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் போலீஸ் உடை அணிந்து ஒருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

 

இதனையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இரு சக்கர வாகனத்தில் போலீஸ் உடை அணிந்து வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

 

அப்போது அவர் சென்னை அமைந்தகரையை சேர்ந்த கஜேந்திரன் என்பவரும், உளுந்தூர்பேட்டை திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வரும் நபர்களிடம் போலீஸ் என கூறி பணத்தை பறித்துச் செல்வது தெரியவந்தது.

 

அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 34 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் மகளின் திருமணத்துக்காக வாங்கிய கடனை அடைப்பதற்காக வழியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon