கள்ளக்காதலியை எரித்துக் கொலை செய்த காதலன்..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார். அய்யலூரை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரஞ்சிதா கடந்த மாதம் 30ஆம் தேதி மாயமாகியுள்ளார்.
அவரது புகாரின்பேரில் ரஞ்சிதாவின் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தபோது அந்த பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவருடன் அவர் கடைசியாக பேசியிருந்தது தெரியவந்தது.
அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் ரஞ்சிதாவுக்கும் ராஜ்குமாருக்கும் தகாத உறவு இருந்ததும் ரஞ்சிதாவை அடித்துக் கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.






