--- --:--:-- --

உத்தரவை மீறி பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை..!

6

ரசு உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. கொரொனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தவிர்த்து பிற மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

மற்றொரு புறம் அரசுப்பள்ளிகளில் மத்திய அரசு நிதி உதவியை பயன்படுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில பள்ளிகளில் 9, 10 உள்ளிட்ட சில மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இது குறித்து கருத்து தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் ராஜ்குமார் எந்த காரணம் கொண்டும் பன்னிரண்டாம் வகுப்பு தவிர்த்து மற்ற வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு அழைக்க கூடாது என தெரிவித்தார். இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Leave a Reply

Right Menu Icon