--- --:--:-- --

பொய்களைக் கூற நான் மோடி இல்லை என்று கூறிய ராகுல் காந்தி..!

3

பொய்களைக் கூற நான் மோடி இல்லை என்றும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் உரையாடினார்.

 

அப்போது பேசிய ராகுல் காந்தி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் ஊதியம் தரப்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இருப்போம். 200 யூனிட் மின்சாரம் இலவசம். குடும்பப் பெண்களுக்கு 2000 ரூபாய் நிதி உதவி போன்ற ஐந்து வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

 

நான் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க மாட்டேன் என்று கூறிய ராகுல் காந்தி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் மோடி இல்லை என்றும் நிச்சயம் ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon