--- --:--:-- --

கொரொனா தடுப்பூசி போடும் திட்டம் மேலும் விவரிக்கப்படும்..!

2

கொரொனா தடுப்பூசி போடும் திட்டம் அடுத்து வரும் நாட்களில் மேலும் விவரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

 

மக்களவையில் பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுவரைநான்கு கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் இதில் 0.00432 விழுக்காடு பேருக்கு தீவிர பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச சுகாதார அமைப்பு தந்துள்ள வழிகாட்டுதல் படி ஒவ்வொரு பிரிவினராக தடுப்பூசி போடப்பட்ட வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்த அமைச்சர் அறிவியல் ரீதியாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இரு தடுப்பூசிகள் குழப்பத்தில் உள்ள நிலையில் மேலும் சில தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon