--- --:--:-- --

நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாம்..!

4

சென்னை மாநகராட்சி சார்பில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று பெருந்தொற்றுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சென்னையில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு நேரம் உள்விளையாட்டு அரங்கில் சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

 

20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2,000 பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாமில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் பெருந்தொற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon