--- --:--:-- --

அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று காலில் விழுந்து பிரச்சாரம்..!

10

தேனி மாவட்டத்தில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், வீடு வீடாக சென்று கிராம மக்கள் காலில் விழுந்து வலியுறுத்தி வருகின்றனர்.

 

உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி பேரூராட்சியை சேர்ந்த கிராம மக்கள் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி விட்டு டி என் சி மற்றும் டி எம் டி எனப்படும் சீர்மரபினர் மற்றும் இரட்டை சாதி சான்றிதழ் அளித்து இழிவுபடுத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இதனால் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறியுள்ள கிராம மக்கள் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் கம்பம் தொகுதியில் போட்டியிட்டால் கடுமையாக எதிர்ப்போம் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

மேலும் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் காலில் விழுந்து அதிமுகவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon