--- --:--:-- --

ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகிறது அஜீத்தின் வலிமை திரைப்படம்..!

8

அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை திரைப்படத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நேர்கொண்டபார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

இன்னும் 15 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதால் ஏப்ரல் 29-ஆம் தேதி படம் வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால் படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.

 

இதனால் எந்த நாட்டை தேர்வு செய்வது, அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்ற கேள்வி உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் வலிமை படம் வெளியாவதில் சிக்கல் என்று கூறுகிறார்கள். அதன் காரணமாக நேர்கொண்டபார்வை வெளியான ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிடலாம் என தயாரிப்பாளர் போனி கபூர் திட்டமிட்டுள்ளார்.

 

அதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வலிமை படம் ஆகஸ்ட் மாதம் தான் வெளியாகும் என திரைத்துறையில் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon