தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது..!
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை வரும் இரண்டாம் தேதி கூடுகிறது. அது தொடர்பாக விவாதிக்க அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.






