--- --:--:-- --

டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.!

3

டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். உலகம் முழுவதும் கொரொனா பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவும் முன்னெப்போதுமில்லாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது.

 

கொரொனா கட்டுப்பாடுகளால் குடியரசுதினவிழா இந்த முறை குறைந்த அளவிலான பார்வையாளர்களுடன் நடைபெறுகிறது. கட்டுப்பாடுகளால் குடியரசுதினவிழா இந்த முறை சிறிய அளவிலான பார்வையாளர்களை கொண்டு நடைபெறுகிறது.

 

கடந்த 50 ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர் இல்லாமல் நடக்கும் குடியரசு தின விழாவும் இதுதான். இந்த விழாவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அதேநேரத்தில் பிரிட்டனில் உருமாறிய கொரொனா தொடங்கியதால் பாதுகாப்பு காரணம் கருதி குடியரசு தின விழாவில் பங்கேற்பதை அவர் தவிர்த்துவிட்டார்.

 

இதனால் கடந்த 1952, 1953 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளுக்குப் பின் சிறப்பு விருந்தினர் இல்லாமல் குடியரசு தின விழா நடக்கிறது. அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் தேசத்தின் பாதுகாப்பு, வீரம் ஆகியவற்றை பறைசாற்றும் ராணுவ வீரர்களின் அணிவகுப்புகளையும் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 

வழக்கத்தைவிட குறைந்த அளவிலான வீரர்களை இந்த முறை அணிவகுப்பில் வீர நடை போடுகின்றனர். அணிவகுப்புக்கு செல்லும் தூரமும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

 

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவை காண ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் இந்த முறை வெறும் 25 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி தரப்பட்டுள்ளது. 15 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon