வீட்டில் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்ட இளைஞரிடம் விசாரணை நடத்தும் காவல்துறையினர்..!
சென்னை அம்பத்தூர் அருகே வீட்டில் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்ட இளைஞரிடம் மூன்று துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அத்திப்பட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் நாய்களை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவர் ஏர் கன் வகையை சேர்ந்த மூன்று துப்பாக்கிகளை வாங்கி வீட்டிலேயே சுட்டு பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அம்பத்தூர் காவல் உதவி ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். இது தமிழ்ச்செல்வன் வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் 3 ஏர் கன்களையும் பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.







