விசைத்தறி ஜவுளி தொழிற்சங்கத்தினர் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்..!
நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் விசைத்தறியை நம்பி சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளனர். 4.7 கிலோ எடை கொண்ட ஒரு கட்டு நூல் கடந்த 5 மாதங்களில் 390 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30 ஆயிரத்து 900 ரூபாய்க்கு வாங்கிய ஒருவெள் நூல் இந்த மாதம் 36 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விசைத்தறி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கொரொனா தாக்கத்திலிருந்து மீண்டு வரக்கூடிய நிலையில் நூல் விலை உயர்வு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் சங்கரன்கோவில் விசைத்தறி தொழில் துறையினர் நாளை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.







