இறைச்சி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட்டால் பறவை காய்ச்சல் பரவாது..!
கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து சாப்பிடுவதன் மூலம் மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாது என்று கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






