--- --:--:-- --

மாஸ்டர் பட வெளியீட்டுக்காக ஈஸ்வரன் படம் வெளிவராமல் முடக்க சதி நடக்கிறது..!

12

மாஸ்டர் பட வெளியீட்டுக்காக ஈஸ்வரன் படம் வெளிவராமல் முடக்க சதி நடப்பதாக சிம்புவின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான டி ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் கண் கலங்கிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கடைசி நேர கழுத்தறுப்பு மூலம் ஈஸ்வரன் படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் ஆகாமல் தடுக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

ஈஸ்வரன் படம் வெளியாவதை தடுக்க கோரி கியூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளதாகவும் அமைச்சரின் ஆதரவு இருப்பதாக கூறி மிரட்டி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் தம்மிடம் அதை மறுத்ததாக கூறினார்.

 

வி‌பி‌எஃப் கட்டணம், கேளிக்கை வரி, ஜி‌எஸ்‌டிக்கு எதிராக போராடியதால் மாஃபியாக்கள் சேர்ந்து தன்னை பழி வாங்கும் நோக்கில் படத்தை தடுக்க முயற்சிப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon