கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கம்ப்யூட்டரில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். நெய்வேலி பெரியசாமி நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது 13 வயது மகன் நேற்று இரவு கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்ததால் கேம் விளையாட வேண்டாம் என அவனது தாய் சுகுணா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரதேஷ் மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






