நடிகை அமலாபாலின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட தடை..!
நடிகை அமலா பாலுடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை முன்னாள் ஆண் நண்பர் சமூக வலைதளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரபல திரைப்பட நடிகை அமலாபாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் பவ்நிந்தர் சிங் என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாட்டால் திருமணம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்களை சிங் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாபால் அவரிடம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மேற்கொண்டு அமலாபாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.






