--- --:--:-- --

கொரொனா தடுப்பு மருந்தை செலுத்தி கொண்ட ஹரியானா அமைச்சர்..!

5

ந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரொனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அணில் வேட்ச் முதல் ஆளாக பங்கேற்றுள்ளார்.

 

கோவாக்ஸின் கொரொனா தடுப்பு மருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஹரியானாவில் இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் முதல் ஆளாக தானும் பங்கேற்பேன் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

 

அதன்படி அம்பாலா மருத்துவமனையில் மூன்றாம் கட்ட பரிசோதனையின் தொடக்கமாக அமைச்சருக்கு கோவாக்ஸின் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon