வழுக்கை தலையை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக பெண் புகார்..!
மும்பையில் வழுக்கையை மறைத்து ஏமாற்றி தன்னை திருமணம் செய்து கொண்டதாக பெண் ஒருவர் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மும்பையில் 27 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் தனக்கும் கணவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது என்றும் அவர்கள் வழுக்கை இருப்பதை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருக்கு வழுக்கை இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தனக்கு வழுக்கை இருப்பதாக கூறி பெண்ணின் அம்மாவிடம் தான் தெரிவித்ததாகவும் அதற்கு இதெல்லாம் பிரச்சனை இல்லை என்று அவர் கூறியதாக முன்ஜாமீன் கோரிய மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.






