மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய இரண்டு ராட்சத மீன்கள்..!
கர்நாடகாவில் மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு ராட்சத மீன்கள் சிக்கின. சுபாஷ் என்ற மீனவர் மால்பி துறைமுகம் அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது திருக்கை என்றழைக்கப்படும் இரண்டு பெரிய மீன்கள் சிக்கின. அந்த இரு மீன்களையும் கரைக்கு கொண்டு வந்தபோது அந்த பகுதி மக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
ஒரு மீன் 750 கிலோ எடையும், மற்றொரு மீன் 250 கிலோ எடையும் இருந்தது. படகிலிருந்து நிலை வாகனத்தில் ஏற்றுவதற்கு கிரேனை வரவழைக்க வேண்டியிருந்தது ஒரு கிலோ 40 ரூபாய்க்கு அந்த மீன்கள் விலை போனதாக கூறப்படுகிறது.






