நில மோசடி வழக்கு : நடிகர் சூரியிடம் 2 மணி நேர விசாரணை..!
நில மோசடி நடந்ததாக கூறிய நடிகர் சூரியிடம் அடையாறு காவல் துறையினர் இரண்டு மணி நேரமாக விசாரணை நடத்தினார். காவல் துறை முன்னாள் டிஜிபி ரமேஷ், படத்தயாரிப்பாளர் அன்பு வேல்ராஜன் ஆகிய இருவரும் நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.
ஆனால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி சூரிய நீதிமன்றத்தை நாடினார். இதைத்தொடர்ந்து முன்னாள் டிஜிபி திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகிய இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் அடையாறு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக நடிகர் சூரியை நேரில் ஆஜராகும்படி அடையாறு காவல் துறையினர் சம்மன் வழங்கியிருந்தனர்.
அதன்படி நேரில் ஆஜரான சூரியிடம் நில மோசடி எவ்வாறு நடந்தது? பண பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். நடிகர் சூரியுடன் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.






