--- --:--:-- --

அரை கிலோ எடையுடன் பிறந்த குழந்தை..! காப்பாற்றிய மருத்துவர்கள்..!

13

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மிகவும் குறைவான எடையுடன் பிறந்த குழந்தைக்கு இரண்டு மாதங்களாக உயர்தர சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பத்திரமாக காப்பாற்றியுள்ளனர்.

 

உதயகுமாரின் மனைவி புவனேஸ்வரிக்கு கருவுற்ற 6 மாதங்களே ஆன நிலையில் பிரசவ வலி ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. 550 கிராம் எடை இருந்த குழந்தையை 2 மாதங்களாக வீட்டில் வைத்து பராமரித்து மருத்துவர்கள் நுரையீரலை பலப்படுத்துவதற்காக மருந்துகளை வழங்கி வந்தனர்.

 

குழந்தையின் எடை ஒன்றரை கிலோவாக அதிகரித்ததால் குழந்தையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர் .திருப்பூர் அரசு மருத்துவமனையில் 550 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையைக் காப்பாற்றுவது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon