சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறுக்கு 13 வயது சிறுவன் உயிர் பலி..!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறுக்கு பழி வாங்க 13 வயது சிறுவனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
நொச்சி குப்பம் பகுதியில் சீட்டு விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் கலைமணி என்பவரை அவரது மகன் அபிணேஷ் என்ற இளைஞரின் கண் முன் கோவிந்தராஜ் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. தந்தையை அடித்த கோவிந்த ராஜை பழி வாங்க அவரது 13 வயது மகன் தேவராஜை கடந்த 9 ஆம் தேதி நொச்சிகுப்பத்திற்கு வரவழைத்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அபினேசிடம் விசாரணை நடத்திவரும் மரக்காணம் போலீசார் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.






