இன்று முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் திறப்பு..!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப் படுகின்றன. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்குச் செல்கின்றனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை மிகவும் குறைவான மாணவர்களே வருகை புரிந்துள்ளனர்.
அவர்களுக்கு முறையாக உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமி நாசினிக் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மாணவர்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் விருப்பம் என்ற ஒரு கடிதத்தை கொடுத்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
பள்ளிகள் திறப்புக்கு புதுச்சேரியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்ப்பு காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்படவில்லை. இருந்த போதிலும் அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.






