அந்தரத்தில் சிக்கி தவித்த இளைஞர் பத்திரமாக மீட்பு..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கையில் காங்கிரட் பலகை இடிந்து விழுந்து அமுக்கியதால் அந்தரத்தில் சிக்கித் தவித்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். செட்டிகுளம் சந்திப்பில் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீர் விபத்து நிகழ்ந்தது.
மணிகண்டன் என்ற 23 வயது தொழிலாளி கட்டிட விபத்தில் சிக்கி தவிக்கும் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






