விஜய்யை எம்ஜிஆர்ரோடு உருவகப்படுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிப்பு..!
தேனியில் நடிகர் விஜய்யை எம்ஜிஆர்ரோடு உருவகப்படுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. போஸ்டர் ஒட்டிய ரசிகர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை எம்ஜிஆரின் மறு உருவமாக சித்தரித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ரிக்ஷாக்காரன் படத்தில் எம்ஜிஆர் சைக்கிள் ரிக்ஷாவை இழுத்து செல்லும் காட்சியை நடிகர் விஜய் சைக்கிள் ரிக்ஷாவை ஓட்டிச் செல்வது போலவும் பின்னால் எம்ஜிஆர் உட்கார்ந்து இருப்பது போன்ற உருவகப்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.
அதில் விஜ யை சின்ன வாத்தியார் என அனைத்தும் 2021 தேர்தலில் தமிழகத்திற்கு தலைமை ஏற்க வா என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் சாட்டையோடு எம்ஜிஆர் தோன்றும் பாடல் காட்சியில் நடிகர் விஜய் சாட்டையோடு தோன்றுவது போன்று காட்சி படத்தையும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. சுவரொட்டி ஒட்ட பட்ட ஒரு மணி நேரத்திற்குள் முற்றிலுமாக கிழிக்கப்பட்டது. மேலும் அனுமதி இல்லாமல் சுவரொட்டி ஒட்டியதாக விஜய் ரசிகர் மீது தேனி காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.






