பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு..!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக் கழக பதிவாளர் அனைத்து உறுப்புகளுக்கும் எழுதியிருக்கும் கடிதத்தில் எழுதி பருவ தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு வருகிற 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை தேர்வு நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் ஏப்ரல் மாத இறுதி பருவ தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தேர்வை நடத்தும் படி பல்கலைக்கழக பதிவாளர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.






