கழிவுகளை அகற்ற நவீன எந்திரங்கள் கண்டுபிடிப்பு..!
கோயம்புத்தூரில் நவீன ரோபோ எந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்கும் வகையில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கும் கழிவுகளை அகற்றும் அதிநவீன ரோபோ எந்திரங்கள் வாங்கப்பட்டன.
தற்போது இந்த ரோபோக்கள் மூலம் கழிவுகள் அகற்றும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. உப்பிலிபாளையம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுகளை ரோபோக்கள் மூலம் சுத்தம் செய்தனர்.
வழக்கத்தைவிட மிக விரைவாக கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதோடு பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படாமல் தடுப்பதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.







