கேரள தங்க கடத்தல் வழக்கில் லைஃப் மிஷன் திட்ட அறிக்கை என்ஐஏவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது..!
கேரள தங்க கடத்தல் வழக்கில் அம்மாநில அரசின் லைஃப் மிஷன் திட்டம் குறித்த சர்ச்சை எழுந்த நிலையில் அந்தத் திட்டம் பற்றிய அறிக்கை என்ஐஏவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தங்கம் கடத்தியதாக ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
என்ஐஏ, சுங்கத் துறை மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணையில் தனது வங்கி லாக்கரில் இருந்த ஒரு கோடி ரூபாய் கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் தனக்கு கமிஷனாக கொடுத்தது என ஸ்வப்னா கூறியிருந்தார்.
இதையடுத்து கேரள அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள அரசின் தலைமை செயலருக்கு கடந்த 22ஆம் தேதி அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி கேரள அரசு சார்பில் லைஃப் மெஷின் திட்ட அறிக்கை என்ஐஏவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.







