இரண்டு திருநங்கைகள் உட்பட மூவர் கொல்லப்பட்டு கிணற்றில் சடலத்தை வீசிச்சென்ற மர்ம நபர்கள்..!
நெல்லையில் இரு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநங்கைகளான பவானி, அனுஷ்கா மற்றும் முருகன் ஆகியோர் காணாமல் போனதாக சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன.
அதன் பேரில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் செல்லதுரை, ரிஷிகேஷ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பவானி, அனுஷ்கா உள்ளிட்ட 3 பேரை கொலை செய்து ஒரு பாழடைந்த கிணற்றில் வீசி சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டு கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தைகளை தத்தெடுத்து தருவதாகக் கூறி அழைத்து சென்று திருநங்கைகள் உள்ளிட்ட மூன்று பேரையும் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






