--- --:--:-- --

தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்..!

7

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த மாதத்திற்குள் பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏற்கனவே பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டு விட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் அடுத்த மாதம் 30-ஆம் தேதிக்குள் பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டு விடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா தடுப்பு வழிமுறைகளை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் இந்த கருவிகளை பொருத்த உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

 

பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்த பிறகு குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் தவிர வேறு யாரும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியாது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon