--- --:--:-- --

யாசகம் பெற்ற பணத்தை கொரொனா நிவாரண நிதியாக வழங்கியவருக்கு சிறப்பு விருது..!

7

துரையில் யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய யாசகருக்கு சமூக சேவைக்கான விருது வழங்கி மாவட்ட ஆட்சியர் பெருமைப்படுத்தினார்.

 

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பாண்டியன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி உதவி செய்து வருகிறார்.

 

கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் தாங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று கொரொனா நிவாரண நிதியாக வழங்கி வருகிறார்.

 

பத்தாயிரம் ரூபாய் வீதம் ஒன்பது முறை 90 ஆயிரம் ரூபாயை கோரான நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அவருக்கு சமூக சேவைக்கான விருதை வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon