அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்ற விமானத்தின் மீது மோதிய டிரோன்..!
அமெரிக்க அதிபர் பயணம் செய்த விமானத்தில் சிறிய ரக டிரோன் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை டிரம்ப் சென்ற ஏர் பொர்ஸ் விமானம் தரை இறங்க முயன்றது.
அப்போது மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணத்தில் இருந்த டிரோன் ஒன்று விமானத்தின் வலது பக்கத்தில் மோதியதாக கூறப்படுகிறது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட அந்த விமானத்தின் மீது டிரோன் மோதி இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணையை அமெரிக்க உளவுத் துறையும் வான் பாதுகாப்பு பிரச்சினைகளை ஒருங்கிணைக்கும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு அமைப்பும் முன்னெடுத்து நடத்துவதாக கூறப்படுகிறது.







