மகாராஷ்டிராவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..!
மகாராஷ்டிராவில் வேதிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பால் குரு மாவட்டத்தில் தாராப்பூர் தொழிற்பேட்டையில் உள்ள நந்தோனியா ஆர்கானிக் ரசாயன உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அடுத்த சில நொடிகளில் தொழிற்சாலை வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயமடைந்தனர். ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் தீவிரம் 8 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.







