கோழிக்கோடு விமானம் நிலையம் பாதுகாப்பாற்றதாக இருப்பதாக 9 ஆண்டுகள் முன்னரே தகவல்..!
கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பற்றதாக இருப்பதாக 9 ஆண்டுகளுக்கு முன்னே எச்சரிக்கை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் ஓடுபாதை கொண்டது.
அனுபவமிக்க விமானிகள் மட்டுமே இத்தகைய ஓடு பாதைகளில் விமானங்களை தரையிறக்க அனுமதி வழங்கப்படுகிறது. இச்சூழலில் 9 ஆண்டுகளுக்கு முன்பே கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது என்று வான் பாதுகாப்பு நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த காலங்களில் கூட கனமழையால் ஓடுபாதையை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி தொடர்ந்து விமானம் இயக்கப்பட்டு வந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.







