4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால ஆயுதங்கள் கண்டுபிடிப்பு..!
மதுரை மாவட்டம் ஏழுமலை அருகே 4 ஆயிரம் ஆண்டு பழமையான கம்மார்க் எனும் கற்குழிகள் இரும்பு உலை மற்றும் கற்கால சங்ககால ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மானத்துபாரைபட்டி கிராமத்தின் அருகே மலையடிவார குகையில் இவை கண்டு எடுக்கப்பட்டன.
கற்கால ஆயுதங்கள், சங்ககால ஆயுதங்கள், இரும்பு ஆயுதங்கள், இரும்புத் துகள்கள், சுண்ணாம்பு குவியல்கள், முதுமக்கள் தாழிகள் என பல்வேறு வகையான பொருட்களை தொல்லியல் துறையினர் கண்டுபிடித்து உள்ளனர். எனவே இந்த பகுதியில் அரசு தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







