--- --:--:-- --

திருப்பூரில் செல்போன் டவர் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி..!

4

திருப்பூரில் பராமரிப்பின்றி சேதமடைந்து செல்போன் டவர் சரிந்து விழுந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்லடம் சாலையில் தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிப்பின்றி இருந்த செல்போன் டவர் ஒன்று திடீரென சரிந்து விழுந்த விபத்தில் அந்த வழியை இருசக்கர வாகனத்தில் சென்ற செங்கிஸ் கான் என்பவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

 

மேலும் கார் ஒன்றும் சேதமடைந்தது. திருப்பூர் மற்றும் பல்லடம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் செங்கிஸ்கானின் உடலை கைப்பற்றியதுடன் இந்த டவரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon