கணவன் கண்முன்னே பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம்..!
ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே கணவரை தாக்கிவிட்டு மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யக்கோரி மலைவாழ் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். ஜமீன் நகரை சேர்ந்த மலைவாழ் மக்களாக நாகேசும் அவரது மனைவியும் குண்டுபாலம் அருகே காவலாளியாக வேலை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் இவர்கள் இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 12 மணி அளவில் அங்கு வந்த 3 பேர் நாகேஷை தாக்கிவிட்டு அவரது கண் எதிரிலேயே அவரது மனைவியை கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கணவன் கண் எதிரே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






