சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர தந்தையும், தாத்தாவும் போக்சோ சட்டத்தில் கைது..!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இளங்கோவன் என்பவர் தனது மகளிடம் குடிபோதையில் அடிக்கடி பாலியல் ரீதியாக அத்துமீறி வந்துள்ளார்.
இதையறிந்த கிராமத்தினர் இளங்கோவனை கண்டித்து சிறுமியை அவரது தாத்தா மாரிமுத்து என்பவரை வைத்து பராமரிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அவர் குடிபோதையில் தவறாக நடந்து கொண்டதால் சிறுமி 5 மாதம் கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது.
சைல்டு லைன் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார் கொடூர மனதுடன் சிறுமியை சீரழித்த தந்தையையும், தாத்தாவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.







